வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Aanadhakumar
Last Updated : புதன், 11 ஜனவரி 2017 (18:35 IST)

பாதியில் சென்ற அமைச்சர்: களத்தில் விவசாயிகள்

அமைச்சரிடம் முறையிட சென்றபோது அவர் வேகமாக கார் ஏறி சென்றுவிட்டார். அப்புறம் எதற்கு இந்த வறட்சி பாதித்த பகுதிகள் குறித்த ஆய்வு என்று விவசாயிகள் போக்குவரத்து துறை அமைச்சருக்கு எதிராக போராட்டம்.


 


கரூர் மாவட்டத்தில் வறட்சிப் பாதித்த பகுதிகளை வெறும் பெயரளவுக்காக மட்டுமே ஆய்வு நடத்தப்பட்டது. கரூர் அருகே அமைச்சர் மற்றும் அதிகாரிகளை முற்றுகையிட முயன்ற விவசாயிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கபட்ட பகுதிகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அமைச்சர்கள் தலைமையிலான குழுக்கள் ஆய்வு நடந்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் இன்று(07-01-17) மாவட்ட ஆட்சித் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் ஆய்வு நடந்தது வறட்சியால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் இந்த ஆய்வில் பங்கேற்ற தமிழக போக்குவரத்து துறை அமைச்சர், வறட்சி பாதித்த பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் எந்த முன்னறிப்பும் இல்லமால் வந்ததாக விவசாயிகள் குற்றம்சாட்டினர். இந்த ஆய்வு வெறும் அரசியல் லாபதிற்காக என்றும் கூறினர். இதையடுத்து விவசாயிகள் அவரை முற்றுகையிட முயன்றபோது, வேகமாக காரில் எறி சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
                                                                                                                           

 
  -    ஆனந்தகுமார்
                                                                                                                                           கரூர்