Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அறைக்குள் முடித்த அமைச்சர் விஜயபாஸ்கர்: மக்கள் எதிர்ப்பால் தலைகீழாக மாறிய நிலைமை!

அறைக்குள் முடித்த அமைச்சர் விஜயபாஸ்கர்: மக்கள் எதிர்ப்பால் தலைகீழாக மாறிய நிலைமை!

ஞாயிறு, 19 மார்ச் 2017 (15:02 IST)

Widgets Magazine

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி, தீபா அணி என மூன்றாக பிரிந்து கிடக்கிறது. இதில் சசிகலா அணி பக்கம் பெரும்பாலான அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் இருந்தாலும் இந்த அணிக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.


 
 
சில இடங்களில் அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் சொந்த கட்சியினரால் மற்றும் பொதுமக்களால் விரட்டப்பட்ட சம்பவங்களும் நடந்தன. மேலும் அமைச்சர் பங்கேற்கும் விழாக்களில் அதிமுக முன்னோடிகள், உறுப்பினர்கள் கலந்து கொள்வதும் குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
 
இதனால் நலத்திட்ட உதவிகளையே ஆடம்பரம் இல்லாமல் அறைக்குள்ளே வைத்து வழங்கும் நிலமைக்கு வந்து விட்டனர். பொதுவாக நலத்திட்ட உதவிகளை அரசியல்வாதிகள் மேடை அமைத்து கூட்டம் கூட்டி அனைவருக்கும் தெரியும் வகையில் செய்வார்கள்.


 
 
ஆனால் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக முதல்முறையாக அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அலுவலக அறைக்குள்ளேயே முடிந்துள்ளது. சில நாட்களாக அமைச்சர் பங்கேற்கும் விழாக்களில் அதிமுக முன்னோடிகள், அதிமுக உறுப்பினர்கள் கலந்து கொள்வது குறைந்து விட்டது.
 
அதன் கரணமாகவே நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஓரு அறைக்குள்ளயே நடத்தி முடித்துவிட்டார்கள் என அதிமுக சீனியர்கள் பேசிக்கொள்கிறார்கள். சசிகலா தலைமை பிடிக்காமல் பலரும் ஓபிஎஸ் அணிக்கும் தீபா அணிக்கும் போய்விட்டதால் தொண்டர்கள் பலர் அமைச்சர் பங்கேற்கும் விழாக்களை புறக்கணித்து வருகிறார்கள்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

நான் ஒரு டைப்பான ஆளு: எடப்பாடி பழனிச்சாமிக்கு சவால் விட்ட எம்எல்ஏ! (வீடியோ இணைப்பு)

கோவை சூலூர் தாலுகாவில் பெரியகுயிலியில் நடந்த கல் குவாரி வெடி விபத்தில் இரண்டு பேர் ...

news

எனக்கு எதிராக எனது கணவரை சசிகலா தூண்டிவிடுகிறார்! - தீபா பரபரப்பு குற்றச்சாட்டு

என்னுடைய கணவர் மாதவனை தூண்டிவிட்டு தவறாக வழிநடத்தி தனிக்கட்சி ஆரம்பிக்க வைத்துள்ளார்கள் ...

news

தொகுதிக்கு வந்த அதிமுக அமைச்சரை கேள்விகளால் துரத்திய பொதுமக்கள்!

தண்ணீர் பந்தல் திறக்க வந்த அமைச்சர் அன்பழகனை, ஒகேனக்கல் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க ...

news

எடப்பாடி அணியில் இருந்து விலகிவிடுவேன்: சூலூர் தொகுதி எம்.எல்.ஏ.கனகராஜ் மிரட்டல்!!

சூலூர் வெடி விபத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிடில், முதல்வர் எடப்பாடி ...

Widgets Magazine Widgets Magazine