1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 17 ஜனவரி 2019 (10:13 IST)

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அமைச்சரின் மூன்று காளைகள்

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வாடி வாசலில் இருந்து சீறி வரும் காளைகளை காளையர்கள் அடக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்றைய ஜல்லிக்கட்டில் மொத்தம் 1,400 காளைகள் பங்கு பெற்றுள்ள நிலையில் இவற்றில் மூன்று காளைகள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான காளைகள் என்ற செய்தி வெளியாகியுள்ளது

வெள்ளை கொம்பன், சின்ன கொம்பன், செவலை கொம்பன் ஆகிய காளைகள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டிருப்பதால் இந்த காளைகளை அடக்கும் காளையர்கள் யார் யார்? என்பதை தெரிந்து கொள்வதில் அனைவரும் ஆவலுடன் உள்ளனர். இன்னும் சில நிமிடங்களில் இந்த மூன்று காளைகள் அடுத்தடுத்தடுத்து வாடிவாசலில் இருந்து வரவுள்ளது

இந்த நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காண பெருந்திரளான கூட்டம் கூடியுள்ளதால் 7 ஏஎஸ்பிக்கள், 15 டிஎஸ்பிக்கள் உட்பட 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போது வரை எந்தவித அசம்பாவிதமும் இன்றி சுமூகமாக ஜல்லிக்கட்டு நடந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.