அமைச்சர் பிஏவின் கொலை மிரட்டல்: டேய் நாயே... தர்மபுரியில் உயிரோடு திரியமாட்ட!

அமைச்சர் பிஏவின் கொலை மிரட்டல்: டேய் நாயே... தர்மபுரியில் உயிரோடு திரியமாட்ட!


Caston| Last Updated: புதன், 2 ஆகஸ்ட் 2017 (11:12 IST)
தர்மபுரி அதிமுகவை சேர்ந்த முனி ஆறுமுகம் என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகனின்  பி.ஏ. பொன்வேலு லஞ்சம் கேட்டு தனக்கு கொலை மிரட்டல் விடுவதாக பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

 
 
தர்மபுரி மாவட்டத்தில் வேளாண்மைத்துறையில் வேளாண் பொருள் பாதுகாப்பு கிடங்கில் 14 காலி பணியிடங்களை நிரப்பை நேர்முக தேர்வு கடந்த சில மாதங்களாக நடைபெற்றது. இதில் ஆதரவற்ற விதவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
 
இதனையடுத்து அதிமுகவை சேர்ந்த முனி ஆறுமுகம் தனக்கு தெரிந்த விதவை பெண் ஒருவருக்கு இந்த வேலையை வாங்கி கொடுக்க அமைச்சரையும் அவரது பி.ஏ.வையும் நாடியுள்ளார். ஆனால் அவர்கள் அதெல்லாம் முடியாது என அவரை விரட்டியுள்ளனர்.
 
அதன் பின்னர் அவர்கள் முறைப்படி அந்த வேலைக்கு விண்ணப்பித்து முயற்சி செய்துள்ளனர். அந்த பெண்ணுக்கு தேவையான தகுதி இருந்ததால் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் அவருக்கு பணி ஆணை பிறப்பித்தது. இந்த தகவல் அறிந்த அமைச்சரின் பி.ஏ. பொன்வேல் தான்னுடைய சிபாரிசில் தான் அந்த வேலை கிடைத்தது என கூறி அவர்களிடம் லஞ்சம் கேட்டுள்ளார்.
 
ஆனால் முனி ஆறுமுகத்திடம் அப்போது அவ்வளவு காசு இல்லாததால் 50 ஆயிரம் ரூபாய் தற்போது கொடுத்துவிட்டு மீத 50 ஆயிரம் ரூபாயை வேலைக்கு சேர்ந்த பின்னர் தருகிறேன் என கூறினார். அதன் பின்னர் அவருக்கு ஆர்டர் நகலும் வந்தது.
 
அதன் பின்னர் தான் இவர்களுக்கு தெரியவந்துள்ளது, எந்தவித சிபாரிசும் இல்லாமல் நியாயமான முறையில்தான் இந்த வேலை கிடைத்திருக்கிறது. அதன் பின்னர் பணியில் சேர்ந்த பின்னரும் அமைச்சரின் பி.ஏ. பணம் கேட்டு டார்ச்சர் செய்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூலை 30-ஆம் தேதி அமைச்சர் கூப்பிடுகிறார் என முனி ஆறும்கத்தை வரவழைத்திருக்கிறார் அமைச்சரின் பி.ஏ.
 
அப்போது அமைச்சரின் பி.ஏ.பொன்வேல் அமைச்சரின் முன்னிலையிலேயே முனி ஆறுமுகத்தை, டேய் நாயே ஒழுங்கா பணத்தை வாங்கி கொடுத்துடு, இல்லைனா தர்மபுரில் நீ உயிரோடு திரிய மாட்டே என பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவங்களை முனி ஆறுமுகம் தனது முகநூலில் பதிவிட்டு வெளிப்படுத்தியுள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :