நான் விலாங்கு மீன் அல்ல… டால்பின் மீன் – அமைச்சர் ஜெயக்குமார் காமெடி !

Last Updated: திங்கள், 11 பிப்ரவரி 2019 (17:49 IST)
அதிமுகவின் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நான் விலாங்கு மீன் அல்ல மக்களுக்கு உதவும் டால்பின் மீன் என்று நகைச்சுவையாகப் பேசியுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பிற்குப் பின்னர் அதிமுகவில் அதிகமாக புகழ்பெற்றது அமைச்சர் ஜெயக்குமார்தான். சார்பாக எந்தப் பஞ்சாயத்தானாலும் வேட்டியை மடித்துக் கொண்டு ஹோதாவில் இறங்குவது முதல் பத்திரிக்கையாளர்களின் துளைத்தெடுக்கும் கேள்விகளுக்குப் போகிற போக்கில் பதில் சொல்வது வரை அதிமுக அணியின் ஆல் ரவுண்டராக வலம் வருகிறார். இடையில் மீம்ஸ் கிரியேட்டர்களின் செல்லப்பிள்ளையாகவும் இருந்து வருகிறார்.

சமீபத்தில் வேலைக் கேட்டு வந்த பெண் ஒருவரைக் கர்ப்பமாக்கிவிட்டார் என்றக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டதால் சிறிது காலம் பத்திரிக்கையாளர்களை சந்திக்காமல் அமைதியாக இருந்தார். ஆனால் இப்போது மீண்டும் வழக்கம்போல ஜாலியாக வலம்வர ஆரம்பித்திருக்கிறார்.

மீன்வளத்துறை சார்பானப் புதிய திட்டம் ஒன்றிற்கு அமைச்சர் ஜெயக்குமார் ஒப்புதல் அளிக்காமல் விலாங்கு மீன் போல நழுவி வருவதாக அதிமுகவைச் சேர்ந்த இன்பதுரைப் புகார் ஒன்றைக் கூறியிருந்தார். அதுகுறித்து இன்று ஜெயக்குமாரிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்த ஜெயக்குமார் ‘நான் விலாங்கு மீன் அல்ல. டால்பின் மீன்.. என்றுமே மனிதர்களுக்கு உதவும் டால்பின் மீன் போல இருப்பேன்’ என நக்கலானப் பதிலைக் கூறினார். இதைக்கேட்ட பத்திரிக்கையாளர்கள் அனைவரும் சிரித்துவிட்டு சென்றனர்.இதில் மேலும் படிக்கவும் :