Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஓபிஎஸ் அணியில் அமைச்சர் ஜெயகுமார்?: நட்சத்திர விடுதியிலிருந்து தப்பியோட்டம்!

ஓபிஎஸ் அணியில் அமைச்சர் ஜெயகுமார்?: நட்சத்திர விடுதியிலிருந்து தப்பியோட்டம்!


Caston| Last Modified வியாழன், 9 பிப்ரவரி 2017 (15:38 IST)
எம்எல்ஏக்களை தன் பக்கம் தக்கவைத்து முதல்வராவதற்காக அந்த கட்சியின் தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலா கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று அதிமுக எம்எல்ஏக்களின் கூட்டம் முடிவடைந்ததும் அவர்கள் அனைவரும் சொகுசு பேருந்தில் அழைத்து செல்லப்பட்டனர்.

 
 
அழைத்து செல்லப்பட்ட எம்எல்ஏக்களில் இரண்டு பேர் நேற்று தப்பியோடி பன்னீர்செல்வம் அணியில் ஐக்கியமாகினர். மீதமுள்ள எம்எல்ஏக்கள் மேற்கு கடற்கரை சாலையில் கூவத்தூரில் உள்ள கோல்டன் பே என்ற நட்சத்திர சொகுசு விடுதியில் சிறைவைக்கப்பட்டனர்.
 
அங்கு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று மதியம் 2 மணியளவில் அந்த நட்சத்திர விடுதியை விட்டு வெளியேறிய அமைச்சர் ஜெயக்குமார் தனது காரில் ஏறி சென்றுள்ளார். அவர் எங்கு சென்றார் என்ற விவரம் தெரியவில்லை.
 
இந்த பரபரப்பான சூழலில் அமைச்சர் ஜெயக்குமாரை காணவில்லை என்பது அவர் பன்னீர்செல்வம் அணியில் தான் சேர இருப்பதாக கூறப்படுகிறது. சசிகலா தரப்பில் மாட்டாமல் இருக்க ஏதாவது மாற்று வழியில் வந்து பன்னீர்செல்வம் வீட்டிற்கு அவர் வரலாம் என கூறப்படுகிறது. இது சசிகலா தரப்புக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :