Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இதுதான் ரஜினியின் புதிய கண்டுபிடிப்பு: ஜெயகுமார் கிண்டல்

jayakumar
Last Modified செவ்வாய், 6 மார்ச் 2018 (10:33 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்து மாணவர்களிடையே பேசும்போது, 'தமிழில் பேசினால் மட்டும் தமிழ் வளராது என்றும், தமிழன் வளர்ந்தால் தான் தமிழ் வளரும் என்றும் கூறினார். மேலும் மாணவர்கள் அனைவரும் ஆங்கிலத்தை நன்றாக பயின்று கொள்ள வேண்டும், என்றும், ஆங்கிலம் இருந்தால்தான் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் நல்ல பணியில் சேர முடியும் என்றால் அப்படி செய்தால் தமிழனுக்கும் பெருமை, தமிழும் வளரும் என்றும் கூறினார்
ரஜினியின் இந்த கருத்து குறித்து அமைச்சர் ஜெயகுமார் இன்று செய்தியாளர்களிடம் கூறியபோது, 'மாணவர்களை தமிழ் பேசச் சொல்லாமல் மம்மி, டாடி என்று ஆங்கிலம் பேசச் சொல்கிறார் ரஜினி என்றும், தமிழ் பேசினால் தமிழ் வளராது என்பது ரஜினியின் புதிய கண்டுபிடிப்பு' என்றும் கிண்டலுடன் கூறினார்

ஜெயகுமாரின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் கிண்டலுடன் கூடிய பதிவினை பதிவு செய்து வருகின்றனர். ரஜினி என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொள்ளாமல் தெர்மோகோல் கண்டுபிடிப்பாளர்கள் அவரது கண்டுபிடிப்பை கேலி செய்வதாக டுவிட்டர் பயனாளி ஒருவர் தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :