Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ட்ரம்பின் வெற்றிக்கு ஓபிஎஸ் தான் காரணம்: ஜெயக்குமார் கிண்டல்!

ட்ரம்பின் வெற்றிக்கு ஓபிஎஸ் தான் காரணம்: ஜெயக்குமார் கிண்டல்!


Caston| Last Modified வியாழன், 20 ஏப்ரல் 2017 (13:08 IST)
அதிமுகவில் இருந்து சசிகலா, தினகரன் குடும்பத்தை விலக்கி வைப்பதாக முதலமைச்சருடன் ஆலோசித்த பின்னர் அமைச்சர்கள் அறிவித்தனர். கட்சியின் நலன் கருதி இந்த முடிவை எடுத்ததாக அமைச்சர்கள் கூறினர்.

 
 
இதனையடுத்து பேட்டியளித்த ஓபிஎஸ், சசிகலா குடும்பத்தை விலக்கி வைத்தை வரவேற்றார். இது எங்கள் தர்ம யுத்தத்துக்கு கிடைத்த முதல் வெற்றி என கூறினார். இதனையடுத்து ஓபிஎஸ் அணியின் நிபந்தனை காரணமாகவே இந்த முடிவை அமைச்சர்கள் எடுத்ததாக கூறப்பட்டது.
 
இந்நிலையில் இன்று தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இதனை மறுத்தார். சசிகலா, தினகரன் குடும்பத்தினரை கட்சியில் இருந்து ஒதுக்கிவைத்தது அனைவரும் ஒன்றுசேர்ந்து எடுத்த முடிவு. தொண்டர்களின் விருப்பத்தின்படி தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
 
ஓபிஎஸ்ஸின் நிர்பந்தத்தால் இந்த முடிவை எடுக்கவில்லை. கட்சியின் நலன் கருதி அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவு. உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமானால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வெற்றிக்கே நான்தான் காரணம் என்றுகூட ஓபிஎஸ் கூறுவார் என ஜெயக்குமார் ஓபிஎஸ்ஸை கிண்டலடித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :