Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கோழி பிடிக்க முடியாதவர்கள்: ஓபிஎஸ் அணியை மீண்டும் சீண்டும் ஜெயக்குமார்!

கோழி பிடிக்க முடியாதவர்கள்: ஓபிஎஸ் அணியை மீண்டும் சீண்டும் ஜெயக்குமார்!


Caston| Last Modified வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (10:00 IST)
சசிகலா குடும்பத்தை அதிமுகவை விட்டு ஒதுக்கி வைப்பதாக அம்மா அணியை சேர்ந்த அமைச்சர்கள் அறிவித்தது எங்களின் தர்ம யுத்தத்திற்கு கிடைத்த முதல் வெற்றி என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

 
 
இதற்கு மறுப்பு தெரிவித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், கட்சியின் நலன் கருதி, தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவு தான் இது என்றார். மேலும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெற்றி பெற்றது கூட என்னால் தான் என ஓபிஎஸ் கூறுவார் என அவரை கிண்டலடித்தார் ஜெயக்குமார்.
 
இதற்கு பதில் அளித்த ஓபிஎஸ் அணியை சேர்ந்த கே.பி.முனுசாமி, அமைச்சர் ஜெயக்குமார் பக்குவமில்லாத அரசியல்வாதியாக இருக்கிறார். அவர் மூன்றாந்தர அரசியல்வாதி போல ஓபிஎஸ் குறித்து கருத்து கூறியுள்ளார் என கூறினார்.
 
கே.பி.முனுசாமியின் இந்த பதிலுக்கு மீண்டும் கம்மெண்ட் அடித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள் வானம் ஏறி வைகுண்டம் போக முடியுமா? என கம்மெண்ட் அடித்தார்.
 
இரு அணிகளும் மாறி மாறி சொற்போரில் ஈடுபட்டு வருவதால் இணைப்பு பேச்சுவார்த்தை சுமூக நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :