ஓவரா பேசிட்டேன்... மன்னிசிடுங்க: தினகரனிடம் பணிந்தாரா அமைச்சர் ஜெயக்குமார்?

ஓவரா பேசிட்டேன்... மன்னிசிடுங்க: தினகரனிடம் பணிந்தாரா அமைச்சர் ஜெயக்குமார்?


Caston| Last Modified வெள்ளி, 16 ஜூன் 2017 (14:41 IST)
துணைப் பொதுச்செயலாளராக சசிகலாவால் நியமிக்கப்பட்ட டிடிவி தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாக அமைச்சர்கள் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் ஊடகங்கள் முன்னிலையில் தெரிவித்தார்.

 
 
தினகரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் முன்னரும், ஜாமீனில் வெளியே வந்த பின்னரும் அமைச்சர் ஜெயக்குமார் தான் தினகரனை ஒதுக்கி வைப்பதாக ஊடகத்தில் தெரிவித்தார்.
 
இது தொடர்பாக அடிக்கடி செய்தியாளர்களை சந்தித்து திட்டவட்டமாக தினகரனை ஒதுக்கி வைப்பதாக கூறினார் அமைச்சர் ஜெயக்குமார். வேறு எந்த அமைச்சரும் அதிகமாக இந்த விவகாரத்தில் வாய் திறக்கவில்லை. இதனால் ஜெயக்குமார் மீது தினகரன் ஆதரவாளர்கள் கடும் கோபத்தில் இருந்தனர்.
 
ஜாமீனில் வெளியே வந்த பின்னர் சசிகலாவை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தினகரனும் தனது பேட்டியில் ஜெயக்குமார் மீதுள்ள கோபத்தை மறைமுகமாக வெளிக்காட்டினார். அதன் பின்னர் அவரது ஆதரவாளர்களும் ஜெயக்குமாருக்கு எதிராக ஊடகத்தில் பேச ஆரம்பித்தனர்.
 
தினகரனை ஒதுக்கி வைத்த விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமாரின் பெயர் அதிகமாகவே அடிபட்டது. இந்நிலையில் அவர் தினகரனிடம் நடந்த சம்பவங்கள் குறித்து மன்னிப்பு கேட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :