Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பூஜை செய்து மழை பெய்ய வைத்த தமிழக அமைச்சர்: என்ன ஒரு அற்புதம்!

பூஜை செய்து மழை பெய்ய வைத்த தமிழக அமைச்சர்: என்ன ஒரு அற்புதம்!


Caston| Last Modified செவ்வாய், 23 மே 2017 (12:53 IST)
தமிழகத்தில் கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது. குடிநீர் பஞ்சம், வறட்சி தலைவிரித்தாடுகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து மக்களை மகிழ்வித்தது. இந்த மழைக்கு தான் நடத்திய சிறப்பு பூஜை தான் காரணம் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.

 
 
தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒரு ராசியில்லாத அமைச்சர் என ஓபிஎஸ் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சில தினங்களுக்கு முன்னர் பேசினார். அவர் அமைச்சர் ஆன பின்னர் தான் முதல்வர் ஜெயலலிதா இறந்தார், யாணைகள் பல காட்டில் இறந்து அருகிறது எனவே அவர் ராசியில்லாத அமைச்சர் என நத்தம் விஸ்வநாதன் குறிப்பிட்டார்.
 
நத்தம் விஸ்வநாதனின் இந்த விமர்சனத்துக்கு பதில் அளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முதல்வரின் உத்தரவுப்படி மழை வேண்டி தமிழகம் முழுவதும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
 
பழனி பெரிய நாயகி அம்மன் கோவிலில் நான் நடத்திய சிறப்பு பூஜைக்குப் பிறகு தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ராசி இல்லாத அமைச்சர் என்றால் மழை பெய்யுமா? எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக அப்படி கூறி வருகிறார்கள் என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :