கமலெல்லாம் ஒரு ஆளே கிடையாது: அவன் என ஏக வசனத்தில் பேசிய அமைச்சர்!

கமலெல்லாம் ஒரு ஆளே கிடையாது: அவன் என ஏக வசனத்தில் பேசிய அமைச்சர்!


Caston| Last Updated: வெள்ளி, 14 ஜூலை 2017 (09:52 IST)
நடிகர் கமல் விஜய் டிவியில் தொகுத்து வழங்கும் பிங் பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் அந்த நிகழ்ச்சியை தடை செய்து கமல் உள்ளிட்ட நிகழ்ச்சியில் உள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி புகார் தெரிவித்தது.

 
 
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கமலிடம் செய்தியாளர்கள் தமிழக அரசை பற்றி கருத்து கேட்டனர். இதற்கு பதில் அளித்த கமல் கொஞ்சமும் தயக்கமின்றி துணிச்சலுடன் தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் இருக்கிறது என ஒரு போடு போட்டார்.
 
மேலும் சிஸ்டம் சரியில்லை என ரஜினி இப்பொழுது தான் சொல்கிறார். நான் ஒரு வருடத்திற்கு முன்பே கூறிவிட்டேன் என்றார் கமல். கமலின் இந்த கருத்துக்கள் பெரிதாக பேசப்பட தமிழக அமைச்சர்கள் கமலுக்கு எதிராக பேட்டி கொடுக்க ஆரம்பித்தனர்.
 
அமைச்சர் ஜெயக்குமார், சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் கமலை விமர்சித்து பேட்டியளித்தனர். இந்நிலையில் பொறியியல் கலந்தாய்வு குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனிடம் கமலின் கருத்து குறித்து கேள்வி எழுப்பினர்.
 
இதற்கு பதிலளித்த அமைச்சர் அன்பழகன் ஒரேயடியாக கமல் மீது பாய்ந்துவிட்டார். கமலெல்லாம் ஒரு ஆளே கிடையாது. அவன் சொல்றதுக்கெல்லாம் நான் பதில் சொல்லணும்னு அவசியமே இல்லை என பிரஸ் மீட்டில் ஒருமையில் ஏக வசனத்தில் பேசினார் அமைச்சர் அன்பழகன்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :