போதையில் பேட்டி அளித்த அமைச்சர் வீடு முற்றுகை


Abimukatheesh| Last Updated: வியாழன், 16 பிப்ரவரி 2017 (17:04 IST)
சசிகலா ஆதரவு அமைச்சர் சி.வி.சண்முகம் வீட்டை ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர்.

 

 
ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக திரும்பியதை அடுத்து பன்னீர்செல்வத்தை குற்றம்சாட்டி குடிபோதையில் செய்தியாளர்கள் பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் அமைச்சர் சி.வி.சண்முகம்.
 
இவரது வீடு சென்னை கிரீன்வேல்ஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்கு அடுத்து உள்ளது. இவரது வீட்டை ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர்.
 
சசிகலா அதாரவு எம்.எல்.ஏ.க்கள் மீது பொதுமக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். தமிழ்நாட்டின் பெரும்பாலான மக்கள் ஓ.பி.எஸ்.க்கு ஆதரவாகவே உள்ளனர். இனி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களது தொகுதி பக்கம் சென்றால் அவர்கள் நிலை என்னவாகும் என்பதை சற்றும் சிந்திக்காமல் சசிகலா பக்கம் சாய்ந்து விட்டனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :