பால் விலை உயர்வு: பொதுமக்கள் அதிருப்தி


Suresh| Last Updated: செவ்வாய், 9 பிப்ரவரி 2016 (19:14 IST)
தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் வரை உயர்த்த தமிழ்நாடு பால் முகவர்கள் நலச்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

 

 
தமிழகத்திலுள்ள ஒரு சில தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை இன்று இரவு முதல் லிட்டருக்கு 2 முதல் 5 ரூபாய் உயர்த்த திட்டமிட்டுள்ளன.
 
இந்நிலையில், பால் விலை உயர்த்தப்படுவதற்கு முறையான காரணம் எதுவும் இல்லை என்று தமிழ்நாடு பால் முகவர்கள் நலச்சங்கத்தினர் குற்றம் சாற்றியுள்ளனர். 
 
மேலும், பால் கொள்முதல் விலை உயர்த்தப்படாத நிலையில், ஒரு சில நிறுவனங்கள் அதன் விலையை உயர்த்துவதால், பிற நிறுவனங்களும் பாலின் விலையை உயர்த்தும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பால்முகவர்கள் நலச்சங்கம் கூறியுள்ளது. 
 
இந்நிலையில், தமிழக அரசு தலையிட்டு உடனே, இந்த விலை உயர்வை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
 
இந்நிலையில், அத்தியாவசியப் பொருளாகிய பாலின் விலை உயர்த்தப்படவுள்ளதற்கு பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :