Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சசிகலாவுக்கு எதிராக புதியகட்சி தொடங்கிய எம்.ஜி.ஆர் ரசிகர்கள்!


லெனின் அகத்தியநாடன்| Last Updated: வெள்ளி, 6 ஜனவரி 2017 (16:22 IST)
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக எம்.ஜி.ஆர் ரசிகர்கள் ஒன்றிணைந்து புதிய கட்சி ஒன்றை துவங்கியுள்ளனர்.

 

தமிழ்நாட்டில் பல்வேறு தரப்பில் இருந்தும் சசிகலாவிற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், எம்ஜிஆர் ரசிகர்கள் ஒன்றிணைந்து புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளனர். அந்த கட்சியின் பெயர் ‘அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்'.

எம்ஜிஆர் போன்று உருவ ஒற்றுமை கொண்ட சக்கரவர்த்தி என்பவர் தான் இந்த ‘அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற கட்சியை ஆரம்பித்துள்ளார்.

இதுகுறித்து லைன் சக்கரவர்த்தி, ”தற்போது அதிமுக தொண்டர்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டு இருப்பதாகவும், புரட்சித் தலைவரின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுசெல்ல இந்தப் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், 30 வருடங்களாக அதிமுகவில் இருக்கும் தனக்கு இதுவரை எந்தப் பதவியும் எனக்குக் கொடுக்கவில்லை எனவும், சசிகலாவே கூப்பிட்டுச் சமரசம் பேசினாலும் மனம் மாறமாட்டோம் என்றும் இறுதி முடிவாக கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :