வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 29 ஜூன் 2015 (16:27 IST)

மெட்ரோ ரயில் - கால அட்டவணை மற்றும் பயணிகள் கட்டணம்

சென்னை மெட்ரோ ரயிலின் அதிகாரபூர்வ கால அட்டவணை மற்றும் பயணிகள் கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 
சென்னை மெட்ரோ ரயில் பயணிகள் கட்டணம் மற்றும் ரயில் புறப்படும், வரும் நேரம் தொடர்பான கால அட்டவணையும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
முதலமைச்சர் ஜெயலலிதா ஆலந்தூரில் இருந்து கோயம்பேடுக்குச் செல்லும் முதல் மெட்ரோ ரயில் போக்குவரத்தை தொடங்கி வைத்துள்ளார். இந்த வழித்தடத்தில் இயங்கும் ரயில்கள் கோயம்பேடு, கோயம்பேடு பேருந்து நிலையம், அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுதாங்கல், ஆலந்தூர் ஆகிய 7 ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
 
கட்டண விவரம்:
 
மெட்ரோ ரயிலில் பயணிக்க குறைந்தபட்சமாக 10 ரூபாயும், அதிகபட்சமாக 40 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறப்பு வகுப்பில் பயணிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தில் இருந்து இருமடங்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
 
*ஆலந்தூர் - ஈக்காட்டுதாங்கல்: ரூ10
 
*ஆலந்தூர் - அசோக்நகர்: ரூ.20
 
*ஆலந்தூர் - வடபழநி: ரூ.30
 
*ஆலந்தூர் - அரும்பாக்கம்: ரூ.40
 
*ஆலந்தூர் - சிஎம்பிடி புறநகர் பேருந்து நிலையம்: ரூ.40
 
*ஆலந்தூர் - கோயம்பேடு: ரூ.40
 
ரயில் பயண கால அட்டவணை:
 
*கோயம்பேடு - ஆலந்தூர் இடையே முதல் மெட்ரோ ரயில் தினசரி காலை 6 மணிக்கு புறப்படும்.
 
*கோயம்பேடு - ஆலந்தூர் இடையே கடைசி மெட்ரோ ரயில் தினசரி இரவு 10.40 மணிக்கு இயக்கப்படும்.
 
*ஆலந்தூர் - கோயம்பேடு இடையேயான முதல் மெட்ரோ ரயில் தினசரி காலை 6.03 மணிக்கு புறப்படும்.
 
*ஆலந்தூர் - கோயம்பேடு இடையேயான கடைசி மெட்ரோ ரயில் தினசரி இரவு 10.03 மணிக்கு இயக்கப்படும்.
 
எத்தனை ரயில்கள்?
 
*தினசரி கோயம்பேடு - ஆலந்தூர் இடையே 95 முறை ரயில்கள் இயக்கப்படும்.
 
*அதேபோல் ஆலந்தூர் - கோயம்பேடு இடையே 97 முறை ரயில்கள் இயக்கப்படும்.
 
*நாளொன்றுக்கு மொத்தம் 192 முறை ரயில்கள் இயக்கப்படும்.
 
*ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ரயில் இயக்கப்படும்.
 
*அதிகபட்சமாக மணிக்கு 72 கி.மீ. வேகத்தில் பயணிக்கும். இருமார்க்கத்திலும் இலக்கை 19 நிமிடங்களில் சென்றடையும்.
 
*ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் 35 விநாடிகள் ரயில் நின்று செல்லும்.
 
இவ்வாறு மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.