1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 25 ஆகஸ்ட் 2018 (16:28 IST)

சென்னையில் மாலை அல்லது இரவில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை செய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 
தமிழகத்தின் ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மட்டும் வெப்பசலணம் காரணமாக மழை பெய்து வருகிறது.
 
தமிழகத்தின் வடமாவட்டங்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை தெரிவித்துள்ளது.
 
வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு அமையம் தெரிவித்துள்ளது.