வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: K.N.Vadivel , சனி, 10 அக்டோபர் 2015 (00:44 IST)

மருத்துவ மேற்படிப்பு நுழைவுத்தேர்வு: மத்திய அரசு புறக்கணிக்க ஜி.கே.வாசன் கோரிக்கை

மாணவர்கள் நலன் கருதி. அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் பொது நுழைவுத்தேர்வு பரிந்துரையை மத்திய அரசு புறக்கணிக்க வேண்டும் தமாகா கோரிக்கை விடுத்துள்ளது.
 

 
இது குறித்து, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:–
 
மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களின் சேர்க்கைக்கு, அகில இந்திய அளவில் தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு நடத்தும் முறையை அமுல்படுத்த மத்திய அரசுக்கு அகில இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உண்மையாக இருக்கும்பட்சத்தில் இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்கக் கூடாது. 
 
மருத்துவப் படிப்பிற்காக பொது நுழைவுத்தேர்வு குறித்து தற்போது வெளியான தகவல் மூலம் மாணவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும்,  மிகுந்த அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
 
மாணவர்கள் நலன் கருதி. அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் பொது நுழைவுத்தேர்வு பரிந்துரையை மத்திய புறக்கணிக்க வேண்டும். மாணவர்களின் கல்வியில் மத்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் காணும் வகையில் திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.