1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 21 அக்டோபர் 2016 (17:07 IST)

வைகோ மீது திமுக தொடர்ந்த தேச துரோக வழக்கு - விடுவித்தது நீதிமன்றம்

திமுக அரசு தொடர்ந்த தேசத் துரோக வழக்கிலிருந்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது.
 

 
கடந்த 2008ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி, சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில், ‘ஈழத்தில் நடப்பது என்ன?’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உரையாற்றினார்.
 
அதில், இந்திய இறையாண்மைக்கு எதிரான அம்சங்கள் இடம்பெற்றதாக அவர் மீது, அப்போதைய திமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை 3-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
 
அரசுத் தரப்பு சாட்சிகள் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். கடந்த ஆகஸ்ட் மாதம் வைகோ நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரிடம் அரசுத் தரப்பு சாட்சிகள் கூறிய விஷயங்கள் தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டது. அவற்றுக்கு அவர் பதில் அளித்தார்.
 
இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வியாழனன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, வழக்கில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை கியூ பிரிவு போலீசார் ஆதாரங்களுடன் நிரூபிக்கவில்லை என்பதால் வைகோவை விடுதலை செய்வதாக சென்னை 3-ஆவது கூடுதல் அமர்வு தீர்ப்பளித்தது.