வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: திங்கள், 5 அக்டோபர் 2015 (22:35 IST)

மக்கள் நல கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக வைகோவை நியமனம்

மக்கள் நல கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 

 
திருவாரூரில், மக்கள் நல கூட்டியக்கத்தின் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மக்கள் நல கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்கு கர்நாடக அரசிடம் இருந்து காவரி நீரை  பெற்றுத்தரக் கோரியும், கர்நாடகா அரசு காவிரியின் குறுக்கே புதிய அணைகள் கட்டுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்தக் கோரியும், டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், எரிவாயு எடுப்பதை அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்தியும், மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கம் சார்பில் திருவாரூர் தெற்கு வீதியில் இன்று மாலை பொது கூட்டம் நடைபெற்றது.
 
இந்த கூட்டத்தில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.