பிரபல கட்சியின் மகளிர் அணி தலைவி படுகொலை .. அரக்கோணத்தில் பரபரப்பு

crime
Last Updated: வியாழன், 11 ஜூலை 2019 (17:40 IST)
அரக்கோணம் அடுத்த கைனூர் ராமசாமி நகரில் வசித்து வந்தவர்  நிர்மலா ( 42). இவர் அரக்கோணம் நகர மகளிர் அணி தலைவியாக பொறுப்பு வகித்து வந்தவர், அரக்கோணத்தில் உள்ள  தாசில்தார் தெருவில் தையல் கடையை நடத்தி வந்தார்.
சில வருடங்களூக்கு முன்னர் இவரது இறந்துவிட்டதால், தனது தாய் படவேட்டம்மாளுடன் இவர் வசித்து வந்திருக்கிறார். 
 
இந்நிலையில் நிர்மலா தனது தாயுடன் வீட்டில் படுத்து தூங்கியவர் காலையில் நீண்ட நேரமாகியும் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை என்று அருகில் உள்ளவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளனர்.
 
உள்ளே நிர்மலா தலையில் பலத்த  காயங்களுடன் பிணமாகக் கிடந்தார். அவரது படுக்கைக்கு அருகிலேயே ஒரு அம்மிக்கல்லும் இருந்துள்ளது. மேலும் நிர்மலாவின் அம்மாவும் பலத்த காயங்களுடன் மயங்கிக் கிடந்துள்ளார்.
 
இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர், நிர்மலா வீட்டில் சோதனையிட்ட போது அவரது செல்போன், டூவிலர் ஆகியவை திருட்டு போயிருப்பது கண்டுபிடிக்கபட்டது. தற்போது தடயவியல் துறையினர் வந்து அங்கு கைரேகைகளை பதவி செய்துள்ளனர்.  இந்தக் கொலையால் அப்பகுதியில் பெரும்  பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :