1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (23:14 IST)

”நீதிமன்றங்களுக்கும் கடமை இருக்கிறது” - தீர்ப்பு குறித்து கமல்ஹாசன் கமெண்ட்

நீதிமன்றங்களுக்கும் கடமை இருக்கிறது. மக்களுக்கும் கூட அந்த கடமை உள்ளது என்று சொத்துக்குவிப்பு வழக்குக் குறித்து நடிகர் கமல்ஹாசன் கருத்துத் தெரிவித்துள்ளார்.


 

கடந்த சில தினங்களாக சமீபமாக, குறிப்பாக ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அரசியல் விஷயங்களில் ஆர்வமாக கருத்து கூறி வருகிறார் நடிகர் கமல்ஹாசன். மற்ற எல்லோரையும் காட்டிலும் தற்போதைய தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்த விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்.

தற்போதைய தமிழ்நாடு அரசியலை பொறுத்த வரை, முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் சசிகலா ஆகிய இருவருக்கும் இடையே உள்ள மோதல்தான் பேசப்பட்டது. ஏற்கனவே அவர், ஓ.பி.எஸ்-ற்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் உச்சநீதிமன்றம், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்பட நான்கு பேர்களும் குற்றவாளிகள் என அதிரடியாக தீர்ப்பு வழங்கியது. மேலும், சசிகலா, இளவரசி, தினகரன் ஆகியோர் சரண அடைய வேண்டும் என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், “தீர்ப்புக்கும் அமைதியாக எதிர்வினையாற்ற மெரினா ஊக்கம் காத்திருக்கவில்லை. மக்கள் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட மதிப்பளித்து எப்போதும் துணையாக இருப்பர்.

நீதிமன்றங்களுக்கும் கடமை இருக்கிறது. மக்களுக்கும் கூட அந்த கடமை உள்ளது" என்று தெரிவித்திருந்தார்..

மற்றொரு பதிவில், “பழைய பாட்டுத்தான் இருந்தாலும்...
தப்பான ஆளு எதிலும் வெல்லும் ஏடா கூடம்..
எப்போதும் இல்லை காலம் மாறும் ஞாயம் வெல்லும்..” என்றும் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து கமல்ஹாசன் சசிகலாவிற்கு எதிராக கருத்துத் தெரிவித்து வருவது தெரிகிறது.