வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 24 டிசம்பர் 2014 (19:27 IST)

இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களுக்கு பிரபலங்கள் டிவிட்டரில் அஞ்சலி

மறைந்த இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களுக்கு பிரபலங்கள் தங்களது டிவிட்டர் கணக்கில் அஞ்சலியையும், இரங்கலையும் தெரிவித்துள்ளனர்.
 
திமுக தலைவர் மு.கருணாநிதி அவர்கள் தனது டிவிட்டரில், கே.பாலச்சந்தர் இறந்தவுடன் மருத்துவமனைக்கு நேரடியாக சென்று வந்ததை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.
 

 
மேலும் அவர் அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில், “மறைந்து விட்டாலும் கே.பி. உருவாக்கப்பட்ட கலையுலக சிறப்புக்களும், என் போன்ற நண்பர்களிடம் காட்டிய பேரன்பும், என்றைக்கும் யாராலும் மறக்க முடியாதவை” என்றும், மற்றொரு இரங்கல் செய்தியில், ”கலைத்துறையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்திய கே.பாலச்சந்தர் அவர்களின் இழப்பை எண்ணி எண்ணி அழுகின்ற துயரச் சம்பவமாகும்” என்றும் தெரிவித்துள்ளார்.

 
மேலும் அடுத்தப் பக்கம்...

மற்ற பிரபலங்கள் அனுப்பியுள்ள இரங்கல் செய்திகள்:
 
பிரகாஷ்ராஜ்:


 

 
”கே.பி சார், என்னுடைய வாழ்க்கையை மாற்றியதற்காக நன்றி... நினைவுகளுக்காகவும்... கற்றவைக்காகவும் கற்காதவைக்காகவும். வலியால் நான் வாய்விட்டு அழுதுகொண்டிருக்கிறேன்... என்னுடைய மனிதனை இழக்கப்போகிறேன்... உங்களை நேசிக்கிறேன்..” என்று குறிப்பிட்டுள்ளார்.
 
ஸ்ருதிஹாசன்:


 
உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும் கே.பி. சார்... எங்களது குடும்பத்திலும், எனது தந்தையின் வாழக்கையிலும் உங்களுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. உங்களுடைய சிறந்த பணியும், வாழ்க்கையும் எங்களுக்கு ஊக்கப்படுத்தியதற்காக நன்றி”
 
மேலும் அடுத்தப் பக்கம்...

நடிகர் விவேக்:


 
”யார் உடைக்க முடியும் - இங்கு
நீ படைத்த சாதனையை?
யார் துடைக்க வருவார் - எங்கள்
விழி வழியும் வேதனையை?”
 

 
”எப்படி சொல்வேன் என் இதயம்
அடைந்த சோகத்தை?
கண்ணீரால் கழுவுகிறேன் தந்தையே
உம் பாதத்தை!”
 
மேலும் அடுத்தப் பக்கம்...

ஏ.ஆர்.முருகதாஸ்:


 
”உங்களை இழக்கிறோம் சார்”
 
ராதிகா சரத்குமார்:
 

 
இந்திய சினிமாவிற்கு பேரிழப்பு, உண்மையான ஜாம்பவான், அனைத்து துறைகளில் உள்ள திறமைசாலிகளையும் ஊக்குவிக்கபவர். இனி எப்போதும், எவராலும் அவரைப்போல ஆக முடியாது. ஆன்மா சாந்தி அடையட்டும் கே.பி. சார்.