வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 1 ஜூலை 2015 (17:58 IST)

கட்டாய தலைக்கவசம்: சென்னை நிலவரம் எப்படி? - ஓர் அலசல்

தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது தொடர்பாக அரசு உத்தரவை அடுத்து சென்னையில் மோட்டார் ஓட்டிகளின் நிலவரம் குறித்த ஒரு பார்வை.
 
கடந்த 18 ஆம் தேதி அன்று தமிழக அரசு, ’ஜூலை 1 ஆம் தேதி முதல் மோட்டார் சைக்கிளை ஓட்டுபவர்களும், வாகனத்தின் பின்னால் அமர்ந்து பயணம் செய்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என்றும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களின் மோட்டார் சைக்கிள், அந்த மோட்டார் சைக்கிளின் பதிவு சான்றிதழ், ஓட்டுனர் உரிமம் ஆகியவை பறிமுதல் செய்யப்படும் என்றும்’ அரசாணையை வெளியிட்டது.
 
இதனால் கடந்த சில தினங்களாக ஹெல்மட் விற்பனை அமோகமாக இருந்தது. கடைசி நாளான நேற்று ஹெல்மட் கடைகளில் கூட்டம் அலைமோதியது. இன்று முதல் இந்த சட்டம் அமலுக்கு வந்தது. இதனையடுத்து பெரும்பாலானவர்கள் ஹெல்மெட் போட்டு ஓட்டிச் சென்றனர். அரிதாக சிலர் ஹெல்மெட் அணியாமலும் ஓட்டிச் சென்றனர்.

தலைக்கவசம் அணிந்து சென்ற இளைஞர்கள்
இருவரும் ஹெல்மெட் போட்டுச் செல்லும் காட்சி

ஹெல்மெட் அணியாமல் செல்லும் காட்சி

ஹெல்மெட் போடாதவர்களை சோதனை செய்யும் காவல்துறையினர்
வாகனம் ஓட்டுபவரும், பின்னால் அமர்ந்திருக்கும் பெண்ணும் தலைக்கவசம் அணிந்து செல்லும் காட்சி

பெண்கள் இருவரும் ஹெல்மெட் அணியாமல் செல்லும் காட்சி

ஹெல்மட்டிற்கு பதிலாக தொப்பி அணிந்து செல்லும் காட்சி