செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 30 மே 2016 (19:50 IST)

பட்டப்பகலில் வாலிபரை ஓட ஒட விரட்டி கொலை முயற்சி : கரூரில் பரபரப்பு

கரூரில் பட்டப்பகலில் ஐஸ் மற்றும் பதாம் கீர் விற்ற வாலிபரை விரட்டி விரட்டி கொலை செய்ய முயன்ற மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டது.


 

 
கரூர் பசுபதீஸ்வரர் திருக்கோயிலின் வளாகம் அருகே குல்பி மற்றும் பாதாம் கீர் விற்று வந்தவர் தமலேஷ். இவர் ராஜஸ்தான் மாநிலம், பில்வேடா மாவட்டம், நந்ரா என்பவரது மகன் ஆவார். தமலேஷ் (வயது 25) கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் குல்பி மற்றும் பாதாம் கீர் விற்று வருகிறார். 
 
இந்நிலையில் இந்த வாலிபரை மர்ம நபர் ஒருவர் விரட்டி விரட்டி கொலை செய்ய முயற்சித்ததையடுத்து உயிர் பயம் காரணமாக தமலேஷ் தப்பித்து ஓடியுள்ளார். அவரது உயிரை காத்துக் கொள்ள அங்கே இருந்து ஒடியுள்ளார். இந்நிலையில் ஈஸ்வரன் கோயில் அருகே இரத்த வெள்ளத்தில் ஒடிய தமலேஷ் மயங்கி கிழே விழ, உடனே அருகில் இருந்தவர்கள் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அழைத்து வந்தனர். 


 

 
இந்நிலையில் கரூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் ஞானசேகரன், காவல் துறை துணை கண்காணிப்பாளர் பெரியய்யா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வெட்டுக் குத்து வாங்கிய தமலேஷ் உடல் நிலை சற்று மோசமாகி வருவதால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
வாலிபர் ஒருவர்  பட்டப்பகலில் ஒட, ஒட விரட்டி கொலை செய்ய முயன்ற சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டு மொத்த காவல்துறையையே கரூர் பக்கம் இந்த சம்பவம் திரும்பி பார்க்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.