Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஓ.பி.எஸ்-ஐ கத்தியால் குத்த முயற்சி - திருச்சியில் பரபரப்பு


Murugan| Last Modified ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2017 (12:07 IST)
திருச்சி விமான நிலையத்தில், தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை கத்தியால் ஒரு நபர் குத்த முயன்ற விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 
ஓ.பன்னீர் செல்வம் இன்று காலை சென்னை விமான நிலையத்திலிருந்து, திருச்சி சென்றார். அதன் பின் அவர் செய்தியாளர்களை சந்திக்க சென்றார். அப்போது கூட்டத்தில் ஒருவர் சந்தேகப்படும்படியான செயலில் ஈடுபட்டதால், அங்கிருந்த ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் போலீசாருக்கு தெரிவிக்க, அவர்கள் அந்த நபரை பிடித்தனர். அப்போது, அவரின் கையில் ஒரு சிறிய கத்தி இருந்ததால் ஓ.பி.எஸ்-ஸின் ஆதரவாளர்கள் அதிர்ச்சியைடந்தனர்.
 
இதனால், அங்கிருந்த போலீசார் அவரை அங்கிருந்து இழுத்து சென்றனர். அவர் ஓ.பி.எஸை கத்தியால் தாக்கவே அங்கு வந்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. அவரின்பெயர் சோலை ராஜன் என்பது மட்டும் தற்போது தெரியவந்துள்ளது. அவரிடம் திருச்சி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 
ஓ.பி.எஸ் சென்ற அதே விமானத்தில் எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி மற்றும் அமைச்சர் விஜய் பாஸ்கர் ஆகியோரும் திருச்சிக்கு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :