Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வெளியேறுகிறாயா, விரட்டவா? - சசிகலாவை மிரட்டுகிறாரா ஓ.பி.எஸ்.?


லெனின் அகத்தியநாடன்| Last Updated: செவ்வாய், 27 டிசம்பர் 2016 (02:02 IST)
’வெளியேறுகிறாயா, விரட்டவா? - சசிகலாவை மீது அதிரடியாக பாய்கிறார் ஓ.பி.எஸ்.’ என்று மலேசிய நண்பன் நாளிதழ் தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளது.

 

இது குறித்து டிசம்பர் 24ஆம் தேதி மலேசிய நண்பன் மேற்கண்ட தலைப்பில் வெளியிட்டுள்ள செய்தியில், ”தமிழகத்தில் மறைந்த ஜெயலலிதாவிற்குப் பிறகு மாநில முதலவர் பொறுப்பை ஏற்றிருக்கும் ஓ.பன்னீர்செல்வத்திற்கே தங்களின் ஆதரவு என்று மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் அறிவித்ததை தொடர்ந்து சற்று நெஞ்சையும் தொனியையும் உயர்த்தி இருக்கும் பன்னீர்செல்வம், ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனில் இருந்து நீயே வெளியேறுகிறாயா? இல்லை நானே விரட்டுட்டுமா? என்று சசிகலாவை நோக்கிப் பாய்ந்துள்ளார்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே மலேசிய நண்பன் 17-12-16 அன்று வெளியிட்டிருந்த செய்தியில், ’கால் இல்லாது வாழ முடியாது... என்னை கருணைக் கொலை செய்துவிடு என்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சசிகலாவிடம் கெஞ்சியதாகவும்’ செய்தி வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :