Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சசிகலாவின் பொது அறிவைக் கண்டு மெய்சிலிர்த்தேன் - மாலன் நாராயணன் கிண்டல்


Murugan| Last Modified செவ்வாய், 10 ஜனவரி 2017 (13:41 IST)
இந்தியா டுடே நிகழ்ச்சியில் விபரம் தெரியாமல் உளறிய, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் பொது அறிவைக் கண்டு, தன் வியந்ததாக மூத்த பத்திரிக்கையாளர் மாலன் நாராயணன் கிண்டல் அடித்துள்ளார்.

 

 
இந்தியா டுடே பத்திரிக்கை சென்னையில் நடத்திய தென்னக மாநாட்டை, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா நேற்று நேரில் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். அப்போது அவரிடம், இந்தியா டுடே பத்திரிக்கையாளர், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என கேள்வி கேட்டார். இதுதான் ஒரு ஊடகம் சசிகலாவிடம் கேட்ட முதல் கேள்வி ஆகும்.  
 
அதற்கு பதிலளித்த சசிகலா “பிராந்திய மொழிகளில் வெளிவரும் இந்தியா டுடே, தமிழ்நாட்டிலேயும் வெளிவருவது மகிழ்ச்சி அளிக்கிறது” எனக்கூறினார்.  
 
உண்மையில், இந்தியா டுடே புத்தகம் தமிழ் பதிப்பு நிறுத்தப்பட்டு 2 ஆண்டுகள் ஆகிறது. அது தெரியாமல், தமிழில் இந்தியா டுடே வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என சசிகலா பேசிய விவகாரம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சமுக வலைத்தளங்களில் கிண்டலடிக்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் மூத்த பத்திரிக்கையாளர் மாலன் நாராயணன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் “தமிழ்நாட்டு வாசகர்களுக்காக தமிழில் இந்தியா டுடே வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அது தொடர வேண்டும் என்றும் திருமதி.நடராஜன் கூறுவதை தொலைக்காட்சியில் கேட்டேன். திருமதி.நடராஜனின் பொது அறிவைக் கண்டும், அவர் எவ்வளவு அப் டேட்டடாக இருக்கிறார் என்பதை எண்ணி மெய்சிலிர்த்தேன்..
 
விதியே விதியே தமிழ் சாதியை என்ன செய்ய எண்ணியிருக்கிறாய்!” என அவர் கிண்டலடித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :