1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வியாழன், 30 ஜூலை 2015 (23:40 IST)

கும்பகோணத்தில் மகாமக விழா பாதுகாப்பு ஆய்வு

கும்பகோணத்தில் மகாமக விழா பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் சுப்பையன் ஆய்வு செய்தார்.
 

 
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகாமக திருவிழா அடுத்த ஆண்டு  (2016) பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி நடக்கிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதற்காக பக்தர்களுக்கு தேவையான வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் செய்து வருகின்றன. இதில், தமிழக அரசு சார்பில் சுமார் ரூ.210 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
 
பல இடங்களிலிருந்து பக்தர்கள் வருகை தருவதால் 7 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
 
தற்காலிக பஸ் நிலையங்கள் அமைய உள்ள இடங்களை மாவட்ட கலெக்டர் சுப்பையன் ஆய்வு செய்தார். தற்காலிக பஸ் நிலையங்களில் குடிநீர், கழிவறை, உயர்மின் விளக்குகள் எந்தெந்த இடத்தில் அமைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
 
இந்த ஆய்வின் போது, கும்பகோணம் உதவி கலெக்டர் கோவிந்தராவ், தாசில்தார் பிரபாகரன், துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசமூர்த்தி உள்ளிட பலர் உடன் இருந்தனர்.