1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: சனி, 14 நவம்பர் 2015 (04:05 IST)

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் மோசடி: ஜி.ஆர். குற்றச்சாட்டு

தமிழ்நாடு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் மோசடி நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில், இடதுசாரிக் கட்சிகளின் தொடர்இடதுசாரிக் கட்சிகளின் தொடர் வற்புறுத்தல் காரணமாக கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டம் கொண்டுவரப்பட்டது.
 
இந்தத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தவில்லை.மாறாக இந்தத் திட்டத்திற்கான நிதியை குறைத்தும், பயனாளிகளின் எண்ணிக்கையை குறைத்தும், இந்தத் திட்டம் அமலாகும் கிராமங்களை குறைத்தும் பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.
 
இந்தத் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக  தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. முறைகேடுகளைக் களைந்து கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும், கூலியை அதிகரிக்க வேண்டும்.
 
தற்போது, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நடைபெற்ற மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பஞ்சாயத்து ராஜ் துறை சார்பில் நடைபெற்ற சமூக தணிக்கை இந்த மோசடியை கண்டுபிடித்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
 
மேலும், கடந்த 2014-15-ம் நிதியாண்டில் எருமார்பட்டி மற்றும் மண்ணூர் கிராமங்களில் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில் 672 குடும்பங்கள் பயனடைந்துள்ளதாக வட்டார வளர்ச்சி அலுவலர் அரசுக்கு தகவல் அனுப்பியுள்ளார்.
 
ஆனால் இந்தத் திட்டத்தில் 1200 பேர் பணியாற்றியதாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு மையத்திற்கு போலியாக கணக்கு அனுப்பப்பட்டு ரூ.30 லட்சம் அளவுக்கு மோசடி நடந்துள்ளது. போலியான பெயர்களை கணக்கு காட்டி பணம் பெறப்பட்டுள்ளது.
 
தமிழகம் முழுவதும் இத்தகைய மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளது. எனவே தமிழக அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றுவோர் குறித்தும், பெறப்பட்ட கூலி குறித்தும் முழுமையாக ஆய்வு நடத்த வேண்டும். தவறு செய்தவர்களை தண்டிக்க மாநில அரசு முன் வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.