1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வெள்ளி, 5 பிப்ரவரி 2016 (22:44 IST)

மகாமகத் திருவிழா: தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு விடுமுறை

மகாமகத் திருவிழா: தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு விடுமுறை

மகாமகத் திருவிழாவை முன்னிட்டு, தஞ்சை, திருவாரூர் மற்றும்  நாகை மாவட்டங்களுக்கு பிப்ரவரி 22 ஆம் தேதி அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
 

 
பனிரென்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக திருவிழா கும்பகோணத்தில் நடைபெறும். இந்த வருட திருவிழா, பிப்ரவரி13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 
 
மகாமக தீர்த்தவாரி எனறு அழைக்கப்படும் முக்கிய விழா  பிப்ரவரி 22 ஆம் தேதி, மதியம் 12 மணி முதல் 1.30 மணிக்குள் நடைபெற உள்ளது.
 
இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலத்தில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு சுமார் 45 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதனால், கும்பகோணம் மகாமகத் திருவிழாவை முன்னிட்டு பிப்ரவரி 22 ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு அரசு சார்பில் விடுமுறை அறிக்கப்பட்டுள்ளது.