Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பொங்கலுக்கு பதிலாக மஹா சிவராத்திரிக்கு: எதற்காக இப்படி?


Abimukatheeesh| Last Updated: செவ்வாய், 10 ஜனவரி 2017 (12:20 IST)
கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் திருநாளை நீக்கிவிட்டு, மஹா சிவராத்திரி சேர்க்கப்பட்டுள்ளது. எதற்காக மஹா சிவராத்திரிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று எல்லோர் மத்தியிலும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.

 

 
மத்திய அரசு பொங்கல் திருநாளை கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கம் செய்து. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழக மக்கள் சமூக வலைதளங்களில் பொங்கி ஆவேசமான கருத்துகளை பதிவிட்டனர்.
 
மத்திய அரசின் இந்த செயலுக்கு தமிழிசை சவுந்தரராஜன் இதற்கு விளக்கமும் அளித்தார். அவர் கூறியதாவது:-
 
பொங்கல் திருநாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுவதில்லை. இதனால் மத்திய அதை கட்டாய விடுமுறை தினத்தில் இருந்து நீக்கியதாகவும், விருப்ப விடுமுறை உள்ளதால் மாநில அரசு சார்பில் விடுமுறை அளிக்கப்படும், என்றார்.
 
பொன்.ராதாகிருஷ்ணன், பழைய தரவுகளை வைத்துக்கொண்டு அப்போது ஏன் திராவிட கட்சிகள் கேட்கவில்லை. காங்கிரஸ் அரசை ஏன் கேட்கவில்லை. இப்போது மட்டும் ஏன்? என்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.
 
கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கலுக்கு பதிலாக மஹா சிவராத்திரி சேர்த்துள்ளனர். தமிழகத்தின் மத்திய அரசு ஊழியர்கள் சங்கம் கலந்துப் பேசி பொங்கல் பண்டிகையை விடுமுறை தினமாக அறிவித்துக்கொள்ள வேண்டும். இதுதான் பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை வழி.
 
மேலும் மஹா சிவராத்திக்கு ஏன் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்று எல்லோர் மத்தியிலும் கேள்விகள் எழுந்துள்ளது. அதற்கான விடை அரசியல் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றுதான். 


இதில் மேலும் படிக்கவும் :