Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சசிகலாவுக்கு சம்மட்டியடி கொடுத்த மாஃபா பாண்டியராஜன்: ஓபிஎஸ் அணிக்கு தாவினார் அமைச்சர்!

சசிகலாவுக்கு சம்மட்டியடி கொடுத்த மாஃபா பாண்டியராஜன்: ஓபிஎஸ் அணிக்கு தாவினார் அமைச்சர்!


Caston| Last Modified சனி, 11 பிப்ரவரி 2017 (13:17 IST)
தமிழக கல்வித்துறை அமைச்சரும் ஆவடி தொகுதி எம்எல்ஏவுமான மாஃபா பாண்டியராஜன் அதிரடி திருப்பமாக இன்று முதல்வர் பன்னீர்செல்வத்தின் அணிக்கு தனது ஆதரவை நேரடியாக சந்தித்து தெரிவித்தார்.

 


நேற்று வரை சசிகலா ஆதரவு அணியில் இருந்து சின்னம்மா சசிகலா தான் முதல்வராக வரவேண்டும் எனவும், பன்னீர்செல்வத்தை விமர்சித்தும் வந்தவர் மாஃபா பாண்டியராஜன். ஆனால் இன்று அதிரடி திருப்பமாக ஓபிஎஸ் அணியில் சேர்ந்துள்ளார்.
 
முன்னதாக இன்று காலை தனது டுவிட்டர் பக்கத்தில் தொகுதி மக்களின் கருத்துகளை கேட்டு நல்ல முடிவு  எடுப்பேன். அம்மாவின் பெருமையை நிலைநிறுத்தும் வகையிலும், அதிமுகவுக்கு பங்கம் வராத வகையில் ஒன்றிணைக்கும் வகையில் நல்ல முடிவு எடுப்பேன் என கூறியிருந்தார்.
 
இந்நிலையில் தற்போது நேரடியாக முதல்வர் பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு சென்று தனது ஆதரவை அளித்தார். முதன் முதலாக தமிழக அமைச்சர் ஒருவர் ஓபிஎஸ் அணிக்கு வந்திருப்பது அனைவருக்கும் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :