Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சசிகலாவை சந்தித்த மதுரை ஆதினம் - தொடரும் அரசியல் பரமபதம்


லெனின் அகத்தியநாடன்| Last Updated: திங்கள், 2 ஜனவரி 2017 (16:35 IST)
அஇஅதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை, மதுரை ஆதினம் போயஸ் இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார்.

 

கடந்த டிசம்பர் மாதம் 5ஆம் தேதி ஜெயலலிதா மறைந்ததை அடுத்து தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வமும், ஜெயலலிதா வகித்து வந்த அதிமுக பொதுச் செயலாளர் பதவியினை ஜெயலலிதாவின் தோழி சசிகலா நடராஜன் அவர்கள் டிசம்பர் 31ஆம் தேதி ஏற்றுக் கொண்டார்.

அதிமுகவில் சசிகலா பொதுச்செயலாளர் பதவி ஏற்றதை தொடர்ந்து அவரே முதலமைச்சர் பதவியை ஏற்க வேண்டும் என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரும், அதிமுக நிர்வாகிகள் சிலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற துணை சபாநயகருமான தம்பித்துரை, சசிகலா தமிழக முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார். இதேபோல் ஓ.எஸ்.மணியன், உதயகுமார் போன்ற மற்ற அமைச்சர்களும் சசிகலா முதல்வர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதனையடுத்து, ஓ.பன்னீர்செல்வத்தை பாஜக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். இந்நிலையில் ஜெயலலிதா தீவர ஆதரவாளரான மதுரை ஆதினம் சசிகலாவை சந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :