1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: சனி, 5 நவம்பர் 2016 (18:17 IST)

10 நாட்களில் ஜெ.வீடு திரும்புவார் : ஜோசியம் சொன்ன மதுரை ஆதீனம்

10 நாட்களில் ஜெ.வீடு திரும்புவார் : ஜோசியம் சொன்ன மதுரை ஆதீனம்

தமிழக முதல்வர் ஜெயலலிதா முழுமையாக குணம் அடைந்து விட்டார் என்றும், விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் மதுரை ஆதினம் கூறியுள்ளார்.


 

 
உடல் நலக்குறைபாடு காரணமாக முதல்வர் ஜெயலலிதா கடந்த 44 நாட்களாக, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடைசியாக அப்பல்லோ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருவது தெரிய வந்தது.  
 
இந்நிலையில் முதல்வர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், மூச்சுத்திணறல் காரணமாக அவருக்கு வைக்கப்பட்டிருந்த சுவாச கருவிகள் அகற்றப்பட்டிருப்பதாகவும், தற்போது அவர் இயல்பாக சுவாசிக்கிறார் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.
 
ஆனால், அப்பல்லோ தரப்பில் இருந்து எந்த அறிக்கையும் வெளியாகவில்லை. இந்நிலையில், அப்பல்லோ நிர்வாக தலைவர் பிரதாப் ரெட்டி செய்தியாளர்களிடம் பேசும் போது “ முதல்வர் வேகமாக குணமடைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அவர் உணர்ந்து வருகிறார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள். அவர் எப்போது வீடு திரும்ப வேண்டும் என அவர்தான் முடிவு செய்வார்” என்று கூறினார்.
 
இந்நிலையில், மதுரை ஆதினம் இன்று சென்னை அப்பல்லோவிற்கு முதல்வரின் உடல் நலம் பற்றி விசாரித்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
 
மதுரை ஆதினம் குருமகா சன்னிதானத்தின் பிரார்த்தனையும் தமிழக மக்களின் பிரார்த்தனையும், லட்சோப லட்ச தொண்டர்களின் பிரார்த்தனையும் வெற்றி பெற்றிருக்கிறது. நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை, அண்ணா திமுக அவைத்தலைவர் மதுசூதனன் ஆகியோரிடம் அரை மணி நேரம் முதல்வர் உடல் நிலை குறித்து விசாரித்தேன். அப்போது அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியான வகையில் அம்மாவின் உடல் நலம் குறித்த முன்னேற்ற செய்திகளை என்னிடம் தெரிவித்தார்கள். இன்னும் 10 நாட்களில் இல்லம் திரும்பி சிறப்பான வகையில் பணி புரிவார்” என்று கூறினார்.