Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜெயலலிதா மரணத்தில் மர்மம்: சந்தேகத்தை கிளப்பும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன்!

ஜெயலலிதா மரணத்தில் மர்மம்: சந்தேகத்தை கிளப்பும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன்!


Caston| Last Modified வியாழன், 9 பிப்ரவரி 2017 (13:48 IST)
தமிழக அரசியலில் மிக முக்கிய நிகழ்வாக அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தற்போது ஓ.பன்னீர்செல்வம் அணியில் சேர்ந்துள்ளார். மதுசூதானன் இன்று முதல்வர் ஓபிஎஸின் இல்லத்தில் சந்தித்து பேசிய அவர் தனது ஆதரவை வழங்கினார்.

 
 
தமிழக அரசியல் சூழல் மிகவும் பரபரப்பாக உள்ளது, முதல்வர் நாற்காலியை கைப்பற்ற அதிமுக தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலா பகீரத முயற்சி மேற்கொண்டு வருகிறார். இவருக்கு தடையாக பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் அவருக்கான ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
 
இந்நிலையில் இன்று அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் முதல்வர் பன்னீர்செல்வத்தின் வீட்டிற்கு நேரில் சென்று அவரை சந்தித்து தனது ஆதரவை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை வைத்தார்.
 
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக தான் கருதுவதாக அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரவுடிகளின் கூடாரமாக அதிமுக மாறிவிடக் கூடாது என கருதுகிறேன். எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட இயக்கம்  காக்கப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :