1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 22 பிப்ரவரி 2017 (11:39 IST)

அந்த வேலைக்கு O .P .S சரி வர மாட்டார் ; ஸ்டாலின் தான் சரியா வருவார்

தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது ..எடப்பாடி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தொடங்கி ,சட்ட சபை களேபரங்கள் ,ஸ்டாலின் சட்டை கிழிப்பு ,மெரினா போராட்டம் ,கிழிந்த சட்டையுடன் ஆளுநருடன் சந்திப்பு ,ஜனநாயக படுகொலைக்கு எதிரான இன்றய ஸ்டாலினின் உண்ணாவிரதம் ,சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ,எடப்பாடியின் சட்டசபை வெற்றியை எதிர்த்து வழக்கு வரை மிகத் தெளிவான படிப்படியான முன்னேற்றங்கள் .பாராட்டுக்கள் !
 


 

ஓர் அரசியல் பார்வையாளனாய் திமுக தலைவர் கருணாநிதியுடன் ஸ்டாலினை ஒப்பிட்டு பலமுறை நான் வருத்தப்பட்டு இருக்கிறேன் .இன்று ஸ்டாலினுக்கு அமைந்த களம் கருணாநிதிக்கு அமைந்திருந்தால் களம் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும்.

அம்மையார் ஜெயலலிதா முகம் பார்க்காமல் உணவு சாப்பிட மாட்டேன் என்று அப்போல்லோவில் தர்ணா இருந்திருப்பார் .அப்பல்லோ ரெட்டியை இந்த நேரம் விசாரணை கமிஷனில் ஆஜர் படுத்தி இருப்பார் .
கிணறு வெட்ட கிளம்பிய பூதம் போல ஆளுங்கட்சிக்கு எதிராக அடுக்கடுக்காக ஊழல்கள் ,பண பரிமாற்றங்கள் நிகழ்ந்த போதெல்லாம் அறிக்கைகள் மட்டும் விடாமல் நேரடியாக களம் கண்டு ரெட்டிகளையும், ராவ்களையும் ,அன்புநாதன்களையும்  ,தன் பேனாவால் சுட்டெரித்து  இருப்பார்.

அரசியல் சதுரங்கத்தில் ஸ்டாலின் காய்களை நகர்த்த துவங்கி விட்டார். அதன் அடையாளம் தான் முதிர்ச்சி மிக்க பேச்சு. அவற்றில் இரண்டை குறிப்பிடலாம்.
ஒன்று, சசிகலாவின் தரத்திற்கு தாழ்ந்து பதில் சொல்ல விரும்பவில்லை என்று சொன்னது. மற்றொன்று வைகோ ஞானி ,அவருக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது என்று சொன்னது.

முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் ,ஜெயலலிதாவைப்போல ஜொலிக்க, மாபெரும் தலைவராக உருவெடுக்க  நிச்சயம் நாட்கள் ஆகும். இரண்டு அல்லது மூன்று தேர்தல்களை அவர் சந்திக்க வேண்டும்.ஜெயலலிதாவிற்கு பிறகு அதிமுக பிளவுப் பட்டு ,அதுவும் சசிகலாவின் சிறைவாசத்திற்கு பிறகு ,அது மக்கள் மன்றத்தில் தன் நம்பிக்கையை இழந்து நிற்கிறது என்பது தான் நிஜம். O .P .S  சரிப்பட்டு வராத நிலையில் /சரிப்பட்டு வர முடியாத நிலையில் ஸ்டாலின் தான் அந்த வேலைக்கு சரிப்பட்டு வருவார் .



இரா .காஜா பந்தா நவாஸ் ,
பேராசிரியர் 
[email protected]