வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : திங்கள், 2 மார்ச் 2015 (07:42 IST)

கணவர் தியாகுவுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் பாடலாசிரியர் தாமரை

கவிஞரும், பாடலாசிரியருமான தாமரை தனது கணவர் தியாகுவுக்கு எதிராக, கணவரின் அலுவலகத்திற்கு முன்பாக தனது மகனுடன் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்.
 
முன்னணி தமிழ் கவிஞராகவும் பாடலாசிரியராகவும் விளங்கி வருபவர் தாமரை. இவர் மின்னலே' படத்தில் 'வசீகரா' என்று தொடங்கம் பாடல்; 'சுப்ரமணியபுரம்' படத்தில் 'கண்கள் இரண்டால்';  'உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்' படத்தில் 'மல்லிகை பூவே மல்லிகை பூவே'; 'தெனாலி' படத்தில் 'இன்சிரங்கோ இன்சிரங்கோ'; 'வாரணம் ஆயிரம்' படத்தில் 'ஒன்ன ஒன்ன தேடி வந்த' உள்ளிட்ட ஏராளமான படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார்.
 
தாமரைக்கும் தியாகுவுக்கும் கடந்த 2002 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இதைத் தொடர்ந்து, இவர்கள் இருவரும் கோடம்பாக்கத்தில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 10 வயதில் சமரன் என்ற மகன் உள்ளார்.
 
இந்நிலையில் தாமரை சூளைமேடு பெரியார் பாதையில் உள்ள கணவர் தியாகுவின் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 
 
கணவர் தியாகு கடந்த 6 மாதமாக, தன்னையும், தனது மகனையும் தவிக்க விட்டுவிட்டு ஓடிவிட்டார் என்று, தாமரை குற்றம் சாட்டினார்.
 
தாமரையின் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக தியாகு அளித்த விளக்கத்தில் நான் எங்கும் ஓடி ஒளிய வில்லை. தாமரையுடன் சேர்ந்து வாழும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் சட்டப்பூர்வ தீர்வுதான் இப்பிரச்சினைக்கு தீர்வாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
 
இந்நிலையில், தாமரை, தியாகுவின் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
 
தனக்கு விவாகரத்து பெறும் எண்ணம் இல்லை என்றும், தனக்கு தேவை சமூக ரீதியிலான தீர்வுதான் என்றும் என்றும் வலியுறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.