வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: புதன், 30 டிசம்பர் 2015 (04:03 IST)

சமையல் கியாஸ் சிலிண்டர் மானியம் ரத்து-மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய ஜி.கே.வாசன் கோரிக்கை

சமையல் கியாஸ் சிலிண்டர் மானியம் ரத்து நடவடிக்கையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் ஜி.கே.வாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
 

 
இது குறித்து, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
இந்தியாவில் சுமார் 16.35 கோடி பேர் சமையல் கியாஸ் சிலிண்டர்களை பயன்படுத்தி வருகின்றனர். இதில், சுமார் 58 லட்சம் பேர் மானியத்துடன் கூடிய சிலிண்டர்களை பெறுவதை சமீப காலமாக நிறுத்திக் கொண்டனர். இதன் மூலம் மத்திய அரசுக்கு சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகியுள்ளது.
 
இந்த நிலையில், ஆண்டுக்கு ரூ. 10 லட்சத்திற்கு மேல் அதிக வருமானம் பெறுபவர்களுக்கு, ஜனவரி முதல் தேதியில் இருந்து மானிய விலையில் சமையல் கியாஸ் சிலிண்டர் பெற முடியாது என மத்திய அரசு  அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த அறிவிப்பை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.