அண்ணன் மனவியோடு காதல்… வீட்டை விட்டு ஓடிய ஜோடி – தற்கொலையில் முடிந்த சோகம் !

Last Modified வியாழன், 15 ஆகஸ்ட் 2019 (11:12 IST)
திருவண்ணாமலை மாவட்டத்தில் தனது கணவனின் தம்பி முறையுள்ளவரோடு வீட்டை விட்டு ஓடித் தலைமறைவான காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.

திருவணணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அகிலா என்ற பெண் தனது கணவனோடு வாழ்ந்து வந்துள்ளார். அகிலாவுக்குக் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. அகிலாவின் கணவரின் சித்தப்பா பையனான ஐய்யப்பன் என்பவர் அவர்கள் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். இதனால் அகிலாவுக்கும் ஐய்யப்பனுக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையடுத்து இருவரும் யாருக்கும் எதுவும் சொல்லாமல் வீட்டை விட்டு ஓடியுள்ளனர்.

காணாமல் போன அகிலா மற்றும் ஐய்யப்பனைக் கண்டுபிடிக்க சொல்லி உறவினர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். காவல்துறையினரின் தேடலிலும் அவர்கள் இருவரும் சிக்கவில்லை. இதையடுத்து சில மாதங்களுக்குப் பிறகு இருவரும் அந்த ஊருக்கே திரும்பி வந்து வாழ ஆரம்பித்துள்ளனர். ஆனால் ஊர்க்காரர்கள் மற்றும் உறவினர்கள் அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிகிறது. இதனல் இருவரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் இருவரும் எலி மருந்தைக் குடித்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இதையடுத்து அவர்களது சடலங்களைக் கண்டெடுத்த உறவினர்கள் போலிஸாருக்குத் தகவல் தெரிவிக்க உடல்கள் கைப்பற்றப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.இதில் மேலும் படிக்கவும் :