1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 7 ஜூலை 2017 (18:59 IST)

பள்ளி பேருந்து மீது மோதிய மணல் லாரி - அமைச்சர் வீட்டருகே விபத்து (வீடியோ)

கரூர் அருகே தனியார் பள்ளி பேருந்து மற்றும் திருட்டு மணல் ஏற்றி சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 2 மாணவிகள் 3 மாணவர்கள் 6 பேர் படுகாயமடைந்தனர். 


 

 
கரூர் அருகே காக்காவாடி பகுதியில் செயல்பட்டு வரும் வேலம்மாள் கல்வி நிறுவனத்திலிருந்து பள்ளி மாணவ, மாணவிகளை கரூர் வந்து இறக்கி செல்லும் அந்த கல்வி நிறுவனங்களின் பேருந்து இன்று மாலை பள்ளி வேலை முடிந்து கரூர் பெரியாண்டாங்கோயில் பகுதியில் மாணவ, மாணவிகளை இறக்கி விட்டு மீண்டும் கோவை ரோட்டிற்கு சென்று கொண்டிருந்தது
 
அப்போது, மாயனூரிலிருந்து மணல் அள்ளி சென்ற மணல் லாரி கோவைக்கு சென்ற போது, அந்த பள்ளி பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் அந்த வேலம்மாள் பள்ளியில் பயிலும் 2 மாணவிகள், 3 மாணவர்கள் மற்றும் ஒரு ஆயாம்மாள் என்று மொத்தம் 5 பேர் படுகாயமடைந்தனர். மேலும் அந்த மணல் லாரிக்கு உரிய எண் கூட எழுதாதும் அது திருட்டு மணல் ஏற்றி வந்ததையடுத்து அதிக வேகமாக வந்ததாகவும் கூறப்படுகின்றது. 
 
தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் தொகுதியின் எம்.எல்.ஏ வுமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டின் அருகிலேயே இந்த விபத்து நிகழ்ந்தது என்பதும், நாளை இவர் அங்கம் வகிக்கும் போக்குவரத்து துறையின் மானியக்கோரிக்கை சட்டசபையில் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
 
இந்த விபத்து குறித்து கரூர் நகர காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும் படுகாயமடைந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சி. ஆனந்தகுமார் - கரூர் செய்தியாளர்