வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 26 அக்டோபர் 2016 (12:48 IST)

ஜெயலலிதா சிகிச்சையில் திடீர் திருப்பம்: டாட்டா காட்ட போகும் லண்டன் மருத்துவர் ரிச்சார்ட்!

ஜெயலலிதா சிகிச்சையில் திடீர் திருப்பம்: டாட்டா காட்ட போகும் லண்டன் மருத்துவர் ரிச்சார்ட்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா திடீர் உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வரும் அவரது உடல் நிலையை மருத்துவக்குழு தீவிரமாக கண்காணித்து வருகிறது.


 
 
நுரையீரல் தொற்றால் பெரும் அவதிபட்டு வந்த ஜெயலலிதாவுக்கு லண்டனில் உள்ள பிரிட்ஜ் மருத்துவமனையின் உலக புகழ் பெற்ற மருத்துவர் ரிச்சர்ட் ஜான் பீலே சிகிச்சை அளித்தார். மருத்துவர் ரிச்சார்ட் வருகைக்கு பின்னர் தான் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் அடைந்ததாக கூறப்பட்டது.
 
அடிக்கடி முதல்வர் ஜெயலலிதாவுக்கு லண்டனில் இருந்து வந்து சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தார் ரிச்சார்ட். அவரது ஆலோசனையின் பேரில் முதல்வரின் சிகிச்சையில் பல்வேறு மாற்றங்களும் செய்யப்பட்டதாக தகவல்கள் வந்தன.
 
இந்நிலையில் மருத்துவர் ரிச்சார்ட் ரொம்ப பிஸியாக இருப்பதால் அவரால் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. அவர் ஏற்கனவே ஒப்புக்கொண்ட அப்பாயிண்ட்மெண்டுகளை தவிர்க்க முடியாத நிலையில் இருப்பதால் வருகிற 7-ஆம் தேதிக்கு அவர் விடைபெற இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.