Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

என்ன நடக்கிறது கூவத்தூரில்? பற்றிக்கொண்ட பரபரப்பு


Abimukatheesh| Last Updated: செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (20:15 IST)
கூவத்தூரில் அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களின் நேரலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு என்ன நடந்து வருகிறது என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

 

 
கூவத்தூரில் ஆயிரக் கணக்கில் காவல்துறை மற்றும் அதிரடிப்படை கூவிக்கப்பட்டுள்ளது. அதோடு அப்பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து சிறிது நேரத்திற்கு முன் நட்சத்திர விடுதியில் தங்கி இருக்கும் அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் காவல்துறையினர் வெளியேற வலியுறுத்தினர். வெளி ஆட்கள் அனைவரையும் வெளியேற்றினர்.
 
இந்நிலையில் தற்போது கூவத்தூரில் அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களின் நேரலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் டிஜிபியை தொடர்ந்து சென்னை பெருநகர காவல் ஆணையர் ஜார்ஜ் தமிழக ஆளுநரை சந்தித்துள்ளார். கூவத்தூரில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  


இதில் மேலும் படிக்கவும் :