கருணாநிதி இறுதி அஞ்சலி - கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்த முக்கிய தலைவர்கள்

police
Last Modified வியாழன், 9 ஆகஸ்ட் 2018 (10:55 IST)
திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி அஞ்சலியின் போது ஏராளமான அரசியல் கட்சிப் பிரமுகர்கள் கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்தனர்.
திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன் தினம் மாலை மரணமடைந்தார். அவரது உடல் ராஜாஜி ஹாலில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.  பல்வேறு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் தொடர்ச்சியாக அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
 
அப்போது பொதுமக்கள் விஐபி வரிசையில் அத்துமீறி நுழைந்ததால், போலீஸார் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். ஒரு கட்டத்தில் போலீஸார் தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
 
இதனிடையே கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூட்டத்தில் சிக்கினார். பின் ராகுலை அவரது பாதுகாப்பு அதிகாரிகள் பத்திரமாக அழைத்து சென்றனர். 
funeral
அதேபோல் கர்நாடக முதல்வர் குமாரசாமி, முன்னாள் முதல்வர் சித்தராமையா, கேரள முதல்வர் பினராயி விஜயன், கவர்னர் சதாசிவம், அகிலேஷ் யாதவ், லாலு மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கூட்ட நெரிசலில் சிக்கி கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினர். பின் அவர்கள் பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டனர்.


இதில் மேலும் படிக்கவும் :