1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 8 மார்ச் 2017 (13:40 IST)

மோசமான வாரத்தைகளால் பேசுகிறார்கள்: லட்சுமி ராமகிருஷ்ணன், குஷ்பு மீது போலீஸில் புகார்

சொல்வதெல்லாம் உண்மை மற்றும் நிஜங்கள் நிகழ்ச்சி நடத்தும் லட்சுமி ராமகிருஷ்ணன், குஷ்பு ஆகியோர் மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


 

 
ஜீ தமிழ தொலைக்காட்சியில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தும் சொல்வதெல்லாம் உண்மை பெரும் வைரலாக சர்ச்சை ஆனது குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் நிஜங்கள் என்ற பெயரில் அதே போன்று ஒரு நிகழ்ச்சியை குஷ்பு நடத்தி வருகிறார். இவரது செயல்களால் இவர் மீது பெரும் புகார் எழுந்தது. ஒரு நிகழ்ச்சியில் குஷ்பு ஒருவரின் சட்டையை பிடித்து அடிக்க கை ஓங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
 
இந்நிகழ்ச்சிகளை தடை செய்ய வேண்டும் சமூக வலைதளங்களில் அனைவரும் கருத்துகளை பதிவிட்டு வந்தனர். லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தும் நிகழ்ச்சியை கேலி செய்து சினிமாவில் கூட ஒரு காட்சி இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் நடிகைகள் குஷ்பு மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் மீது சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.எஸ்.பாலாஜி சென்னை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில் கூறியுள்ளதாவது:-
 
இந்த நிகழ்ச்சிகள் குடும்ப உறவுகளை அவமானப்படுத்தும் நிகழ்ச்சிகளாகும். இந்த நிகழச்சிகள் மனித உரிமை மற்றும் குழந்தைகள் உரிமைகளை மீறி வருகிறது. குற்றங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் படத்தை ஊடகங்களில் வெளியிடக்கூடாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் நிகழ்ச்சிகளில் மோசமான வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள்.
 
நிகழ்ச்சிகளை நடத்தும் குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் மோசமான வாரத்தைகளை பயன்படுத்தி பேசுகிறார்கள். குடும்ப பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்பவர்கள் அதற்கான படிப்பை படித்திருக்க வேண்டும். அவர்களிடம் அந்த படிப்பு இல்லை. இந்த நிகழ்ச்சிகளை தடை செய்வதுடன் அதை நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.