Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அரசியலுக்கு வருவோம் - ராகவா லாரன்ஸ் அதிரடி

புதன், 1 பிப்ரவரி 2017 (11:20 IST)

Widgets Magazine

மாணவர்களுடன் சேர்ந்து தனி அமைப்பை தொடங்கவுள்ளதாகவும், தேவைப்பட்டால் அரசியலுக்கும் வருவோம் என நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.


 

 
ஜல்லிக்கட்டு வேண்டி சென்னையை சேர்ந்த மாணவர்கள், மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்திய போது, நடிகர் ராகவா லாரன்ஸ் தானாகவே சென்று அவர்களுடன் இணைத்துக் கொண்டார். 
 
இந்நிலையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
ஜல்லிக்கட்டிற்காக மாணவர்கள் நடத்திய போராட்ட உணர்வை கொச்சைப்படுத்தும் வகையில் சிலர் அரசியல் சாயம் பூசுகிறார்கள். அது வருத்தமாக இருக்கிறது. தற்போது போராட்டக் குழுவினரோடு பயணித்து வருகிறேன். எங்களின் போராட்டத்தின் அடுத்தகட்டமாக சிலவற்றை செய்ய முடிவெடுத்துள்ளோம். கல்வி, மருத்துவம் ஆகிய இரண்டிற்கும் முன்னுரிமை கொடுத்து உதவி செய்ய முடிவானது. மேலும், வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், மரணம் அடைந்தவர்களுக்கும் உதவி செய்ய முடிவெடுத்துள்ளோம். 
 
ஏற்கனவே, நான் அறக்கட்டளை வைத்து சில உதவிகளை செய்து கொண்டிருக்கிறேன். அதனால், தற்போது ஒரு தனி அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் உதவி செய்ய முடிவு செய்துள்ளோம்.
 
இந்த அமைப்பில் இருக்கும் மாணவர்கள் எந்த அரசியல் கட்சி மற்றும் ஜாதி அமைப்பில் இருக்கக்கூடாது. தேவைப்பட்டால் எதிர்காலத்தில் அரசியலுக்கும் வருவோம். ஜல்லிக்கட்டிற்காக நடத்திய போராட்டம் வெற்றி பெற்றதை விரைவில் கொண்டாடவுள்ளோம்” என அவர் கூறினார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

மத்திய பட்ஜெட் 2017-18: உடனுக்குடன் (Live Update)

2017-ஆம் ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதனையடுத்து இன்று ...

news

ஜல்லிக்கட்டு வழக்கு: உச்ச நீதிமன்றத்தை அதிர வைத்த தமிழக வழக்கறிஞரின் வாதம்!

நேற்று ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய தமிழக வழக்கறிஞரின் வாதம் ...

news

சசிகலா முதல்வர்; பறிபோகும் அமைச்சர்களின் பதவி: பரபரக்கும் அரசியல் நிலவரம்!

தமிழக அரசியல் களம் தற்போது தான் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது என்கிறார்கள் அரசியல் ...

news

நடிகர் ராகவா லாரன்ஸ் அரசியலுக்கு வருகிறார்: இளைஞர்கள் கட்சிக்கு தலைமை தாங்க தயார்!

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நடிகர் ராகவா ...

Widgets Magazine Widgets Magazine