வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: திங்கள், 5 அக்டோபர் 2015 (23:12 IST)

லாரி ஸ்டிரைக் வாபஸ்: 5 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது

இந்தியாவில் 5 நாளாக நடைபெற்று வந்த, லாரி ஸ்டிரைக் வாபஸ் பெற்றப்படுள்ளது.
 

 
இந்தியாவில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளையும் முறைப்படுத்த வேண்டும். டீசல் விலை குறையும் போது, வரியையும் குறைக்க மத்தியமாநில அரசுகள் பரிந்துரை செய்ய வேண்டும் மற்றும் போக்குவரத்து வாகன வரியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் உள்பட  கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் நாடு முழுவதும் அக்.1 ஆம் தேதி  முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியது.
 
இந்தப் போராட்டம் இன்று 5 ஆவது நாளாக தொடர்கிறது. இதனால் சரக்குகளை பிற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்ல முடியாமல் தமிழகத்திலேயே தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
 
அதேபோல், மற்ற மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு சரக்குகள் வராததால், அத்தியாவசியப் பொருட்களுக்கு, கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயரும் ஆபத்து  ஏற்படுள்ளது.
 
இந்த நிலையில், இன்று மாலை டெல்லியில் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி பேச்சுவார்த்தை நடத்தினார்.  அதில் சுமாக உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
 
மேலும், போக்குவரத்து துறை செயலாளர் விஜய் சிப்பர் தலைமையில் ஒரு கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதில் லாரி உரிமையாளர்கள் சங்க பிரநிநிதிகளும் இடம் பெறுவார்கள் என்றும் தெரிவித்தார்.
 
இந்தக் கமிட்டி, லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்து டிசம்பர் 15ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும். இதனையடுத்து, நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
 
பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு ஏற்பட்டதை அடுத்து, லாரி ஸ்டிரைக்கை வாபஸ் பெறப்படுவதாக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் பீம் வத்வா அறிவித்துள்ளார்.