1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By k.N.Vadivel
Last Updated : வியாழன், 3 செப்டம்பர் 2015 (02:17 IST)

தொழிலுறவு சட்டத் தொகுப்பு மசோதாவை தீ வைத்து கொளுத்திய தொழிலாளர்கள்

தொழிலுறவு சட்டத் தொகுப்பு மசோதாவை தொழிலாளர்கள் தீ வைத்து கொளுத்தினர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
 

 
புஜ தொழிலாளர் முன்னணியின் சார்பில், திருவள்ளூர் மாவட்டத்தின் சார்பாக கும்முடிப்பூண்டி பைபாஸ்
சாலையில் செப்டம்பர் 2 ஆம் தேதி அன்று, தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வுரிமையை காவு கொடுக்கின்ற தொழிலுறவு சட்டத் தொகுப்பு மசோதாவை தீயிட்டுக் கொளுத்துவோம் என்று அறிவித்தபடி, தொழிலுறவு சட்டத் தொகுப்பு மசோதா தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.
 
இந்த போராட்டத்திற்கு, புஜ தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் (கிழக்கு) மாவட்டத் தலைவர் சதிஷ் தலைமை தாங்கினார். மாநில இணைச் செயலாளர் சுதேஷ் குமார் தொழிலாளர்கள் மத்தியில் கண்டன உரையாற்றினார்.
 
இந்த போராட்டத்தில், தொழிலாளர்கள் சுமார் 700க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
 
பின்பு, கைது செய்த அனைவரையும் கும்முடிப்பூண்டியில் உள்ள சமுதாயக் கூடத்தில் அடைத்து வைத்தனர். மேலும், இடமின்மை காரணமாக அருகில் உள்ள ஒரு கோயிலின் உள்ளே அடைத்துவைத்தனர். பின்பு, அனைவரையும் விடுதலை செய்தனர்.