Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

எம்.எல்.ஏ.க்களை சிறைபிடிக்க சசிகலாவுக்கு என்ன அதிகாரம் உள்ளது?: ஆவேசமான குஷ்பு

வியாழன், 9 பிப்ரவரி 2017 (12:32 IST)

Widgets Magazine

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ஆளும் அதிமுக மீது பகிரங்க குற்றச்சாட்டுகளை வைத்தார். சசிகலா தரப்பு தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர் என கூறினார். இது நாட்டையே உலுக்கியது. இதனையடுத்து சசிகலா மீதான ஒட்டுமொத்த எதிர்ப்பும் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக திரும்பியுள்ளது. தமிழக மக்கள் அனைவரும் பன்னீர்செல்வத்தின் பின்னால் ஒன்று சேர்ந்து நிற்பது போல ஒரு சூழல் உருவாகியுள்ளது.  
 

 


ஆனால், அதிமுக எம்.எல்.ஏக்கள் 134 பேரின் ஆதரவும் தங்களுக்கே இருப்பதாக சசிகலா தரப்பு கூறி வருகிறது. இதுவரை ஐந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் மட்டுமே, ஓ.பி.எஸ் பக்கம் சென்றுள்ளதாக தெரிகிறது. இன்னும் சிலர் வருவார்களா.. மாட்டார்களா என்பது தெரியாமல் ஒரு குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது.


இந்நிலையில் ஆளுநர் சென்னை திரும்பிய பிறகு, எம்.எல்.ஏ.க்களை திரும்ப அழைத்து வந்து, ஆளுநரை சந்தித்து ஆட்சிக்கு  உரிமை கோரும் முடிவில் சசிகலா இருப்பதாக தெரிகிறது. இதையடுத்து அதிமுக எம்.எல்.ஏக்கள் மொத்தம் 3 பேருந்துகளில் ஏற்றப்பட்டு, ஒரு பேருந்து ஊட்டிக்கும், ஒரு பேருந்து கோவாவிற்கும், ஒரு பேருந்து பெங்களூருக்கும் செல்வதாக நேற்று செய்திகள் வெளிவந்தன. இது குறித்த புகைப்படங்களும் வெளியாகின.

எம்.எல்.ஏ.க்கள் ரிசார்ட்டுகளில் சிறை வைத்திருப்பது குறித்து காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு தனது கண்டனத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியபபோது,

131 எம்எல்ஏக்களும் கடத்தப்படுவது போன்று சொகுசுப் பேருந்தில் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். சிறை குற்றவாளிகளைப் போல் எம்.எல்.ஏ.க்களை நடத்துவதற்கு இந்தப் பெண்ணுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. பணமா? அல்லது அதிகாரமா? என்று பதிவிட்டுள்ளார்.Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

7 வயது சிறுமி எரித்து கொலை: பலாத்காரத்தை தடுக்க சத்தம் போட்டதால் நேர்ந்த கொடுமை!!

பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது சத்தம் போட்டதால் ஆத்திரத்தில் சிறுமியை கொன்றது ...

news

போதையில் உளறிய அதிமுக அமைச்சர்? - வைரல் வீடியோ

சசிகலாவிற்கு ஆதரவாகவும், ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராகவும், சட்டத்துறை அமைச்சர் சி.வி. ...

news

பன்னீர்செல்வம் போல் சசிகலாவால் செயல்பட முடியாது: சீமான்

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தரப்பு, தன்னை மிரட்டி, கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதத்தை ...

news

பிணைக் கைதிகளான அதிமுக எம்எல்ஏக்கள்: பரபரப்பான சூழலில் ஆளுநரின் நடவடிக்கை என்ன?

தமிழக அரசியல் சூழல் மிகவும் பரபரப்பாக உள்ளது, முதல்வர் நாற்காலியை கைப்பற்ற அதிமுக ...

Widgets Magazine Widgets Magazine