வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 28 ஜூன் 2017 (11:26 IST)

பொய் வழக்கில் தான் சசிகலா சிறையில் இருக்கிறாராம்: இது நீதிமன்ற அவமதிப்பாகாதா?

பொய் வழக்கில் தான் சசிகலா சிறையில் இருக்கிறாராம்: இது நீதிமன்ற அவமதிப்பாகாதா?

அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக உள்ள சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


 
 
ஆனால் அவர் பொய் வழக்கால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர்களில் ஒருவரான குண்டு கல்யாணம் கூறியுள்ளார். இவரது இந்த பேச்சு நீதிமன்றத்தையும், நீதியையும் அவமதிக்கும் செயலாக அமைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
 
அதாவது ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நான்கு பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு 18 வருடங்களாக நடைபெற்ற வழக்கு. கீழமை நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என பல நீதிமன்றங்களை கடந்து இந்த வழக்கு இறுதியில் முடிவுக்கு வந்தது.
 
சிறப்பு நீதிமன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு அதனை மேல் முறையீடு செய்து உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். அதனையும் மேல் முறையீடு செய்து இறுதியாக அவர்கள் குற்றவாளி தான் என உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
 
இப்படி நாட்டின் உயரிய நீதிமன்றத்தால் சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளி தான் என உறுதி செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களின் விசாரணைக்கும், தீர்ப்புக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமாக சசிகலா பொய் வழக்கால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என அதிமுகவின் குண்டு கல்யாணம் கூறியுள்ளார்.